நட்டத்தில் ஏர் இந்தியா: SIA ஏன் தொடர்ந்து முதலீடு செய்கிறது?
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இதுவரை இல்லாத அளவு நட்டம்....
நிறுவனத்தை மாற்றியமைக்க பல பில்லியன் டாலர் செலவு...
மேலும் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யவேண்டும்....
ஏர் இந்தியா (Air India) நிறுவனத்துக்கு ஏகப்பட்ட சவால்கள்.
எரிபொருள் செலவு, அரசியல் இடையூறுகள் இவை கூடுதல் அழுத்தம் கொடுக்கின்றன.
ஆனாலும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) நிறுவனம் ஏர் இந்தியாவில் 25.1 விழுக்காட்டுப் பங்கைத் தொடர்ந்து வைத்துள்ளது.
இது நீண்டகால முதலீடு என்பதில் உறுதியாக இருப்பதாகவும் SIA கூறியுள்ளது.
“இது எளிதான பயணம் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை,” என்கிறார் SIA தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் போங் (Goh Choon Phong).
விஸ்தாராவை (Vistara) அமைக்க Tata Sons நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்தபோதே இது நீண்டகால முயற்சி என்பதை அறிந்திருந்ததாக அவர் சொன்னார்.
SIA ஏர் இந்தியாவை ஏன் நம்புகிறது?
இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையின் அளவும் வளர்ச்சி வாய்ப்புகளும் இதற்கு முக்கியக் காரணம்.
இந்தியா உலகின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்துச் சந்தைகளில் ஒன்று. கடந்த பத்தாண்டுகளில் பயணிகள் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 10 முதல் 12 விழுக்காடு அதிகரித்துள்ளது.
2040ஆம் ஆண்டுக்குள் பயணிகள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1.1 பில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவில் உள்ள பங்கு, இந்தியச் சந்தையை நேரடியாகப் பயன்படுத்திக்கொள்ள SIAவுக்கு வாய்ப்பளிக்கிறது என்கின்றனர் CNAவிடம் பேசிய நிபுணர்கள்.
ஏர் இந்தியாவிடம் விரிவான உள்நாட்டு விமானச் சேவைக் கட்டமைப்பு உள்ளது. விமானப் போக்குவரத்து உரிமைகளும் விமான நிலையங்களில் தரையிறங்குவதற்கும் புறப்படுவதற்கும் நேர ஒதுக்கீடுகளும் உள்ளன.
புதிதாகச் சந்தையில் நுழையும் விமான நிறுவனம் இவற்றைப் பெறுவது கடினம்.
டில்லியும் மும்பையும் வலுவான அனைத்துலகப் பயண இணைப்பு மையங்களாக உருவாகலாம்.
SIA முதலீட்டால் ஏர் இந்தியாவுக்கு என்ன பலன்?
SIAவுக்கும் ஏர் இந்தியாவுக்கும் இடையிலான உறவு வெறும் முதலீட்டுடன் நின்றுவிடவில்லை.
SIA மூலம் ஏர் இந்தியாவுக்கு இரண்டு முக்கியப் பலன்கள் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
ஒன்று, வலுவான விமானச் சேவை இணைப்புகள். மற்றொன்று, விமானத்துறை சார்ந்த SIAவின் அனுபவம்.
சிங்கப்பூரை மையமாகக் கொண்ட SIAவின் சேவைக் கட்டமைப்பை ஏர் இந்தியாவின் விரிவான உள்நாட்டுக் கட்டமைப்புடன் இணைக்க முடியும்.
இதன்மூலம் இந்தியா, தென்கிழக்காசியா, மற்ற அனைத்துலக இடங்களுக்கு இடையே கூடுதல் பயணிகளை ஈர்க்க முடியும்.
விமானச் சேவைகளுக்குத் திட்டமிடுதல், வருவாய் நிர்வாகம், உயர்தரப் பயணச் சேவைகள், அனைத்துலக நடவடிக்கைகள் போன்றவற்றிலும் SIA தனது நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்ள முடியும்.

ஆதாரம் : CNA