Skip to main content
தரையிறங்கச் சில நொடிகள்... திடீரெனச் சாய்ந்த விமானம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் trending

தரையிறங்கச் சில நொடிகள்... திடீரெனச் சாய்ந்த விமானம்

வாசிப்புநேரம் -
தரையிறங்கச் சில நொடிகள்... திடீரெனச் சாய்ந்த விமானம்

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 02 Nov 2026 12:53PM புதுப்பிப்பு : 02 Nov 2026 03:04PM

விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்க வந்த விமானம்...

திடீரென ஒரு பக்கமாகச் சாய்ந்தது...

பார்ப்போரைப் பதறவைக்கும் அந்தக் காணொளி இணையத்தில் பரவலானது. 

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் SQ213 விமானம், ஆஸ்திரேலியாவின் பெர்த் (Perth) அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்க வந்த சில நோடிகளில், திடீரென ஒரு பக்கம் சாய்ந்தது. 

சம்பவம் நேற்று முன்தினம் (அக்டோபர் 31) நடந்தது. 

விமானத்தின் இறக்கை தரைக்கு மிக அருகில் செல்வதைக் காணொளியில் பார்க்க முடிந்தது.

பலத்த காற்று வீசியதால், விமானிகள் தரையிறங்கும் முயற்சியைக் கைவிட்டதாக தெரியவந்தது. 

அதைத் தொடர்ந்து, விமானம் மீண்டும் மேல் நோக்கிச் செலுத்தப்படுவதைக் காணொளியில் காணமுடிந்தது. 

விமானத்தில் இருந்த பயணி ஒருவரின் சகோதரர் நடந்தவற்றைக் காணொளியில் பதிவிட்டார். 

அந்தத் தருணம் அவருக்கு மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறினார். 

விமானம் ஓடுபாதையில் மோதிவிடுமோ என்ற அச்சம் அவரை நிலைகுலைய வைத்ததாக அவர் குறிப்பிட்டார்.  

விமானம் இரண்டாவது முயற்சியில் பிற்பகல் 12.30 மணிக்குப் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. 

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்