Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

F1 கார்ப் பந்தயத்திற்கான ஆதரவை இன்னும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ள SIA

வாசிப்புநேரம் -
F1 கார்ப் பந்தயத்திற்கான ஆதரவை இன்னும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ள SIA

(படம்: AFP) 

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA), Formula One கார்ப் பந்தயத்திற்கான ஆதரவை இன்னும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.

அந்த ஆதரவு இவ்வாண்டிலிருந்து ஆரம்பிக்கும்.

இவ்வாண்டின் F1 கார்ப்பந்தயம் செப்டம்பர் 30ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 2ஆம் தேதி வரை நடைபெறும்.

ஆதரவை நீட்டிப்பதன் மூலம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் உலகளாவிய கட்டமைப்புக்கு அது வழியமைக்கும்.

மேலும் அது, சிங்கப்பூர் ஒரு முக்கிய அனைத்துலக விமானப் போக்குவரத்து நடுவம் என்னும் நிலையைத் திரும்பப் பெறுவதற்குக் கைகொடுக்கும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.

இவ்வாண்டின் F1 கார்ப்பந்தயம், நோய்ப்பரவல் காரணமாக ஈராண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இடம்பெறுகிறது.

ஆகவே அது சிங்கப்பூருக்கு மிக முக்கியமான மைல்கல் என்று நிறுவனம் தெரிவித்தது.

பந்தயத்திற்கு வழங்கப்படும் ஆதரவின் மதிப்பு வெளியிடப்படவில்லை.

ஆதாரம் : Today

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa