Skip to main content
ஒடிஷாவில் நல்ல வர்த்தக வாய்ப்புகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

ஒடிஷாவில் நல்ல வர்த்தக வாய்ப்புகள் - சிங்கப்பூர் நிறுவனங்கள் நம்பிக்கை

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழிற்சபை இந்தியாவின் ஒடிஷா மாநிலத்துக்கு வர்த்தகப் பேராளர்க் குழுவை வழிநடத்திச் செல்லவிருக்கிறது.

இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் தர்மன் சண்முகரத்னம் தமது பயணத்தின் ஒரு பகுதியாக ஒடிஷா செல்லவிருக்கிறார்.

சிங்கப்பூருக்கும் ஒடிஷாவுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த பயணம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒடிஷா மாநிலம் வழங்கும் வர்த்தக வாய்ப்புகள் குறித்து விவரித்தார், தற்போது புதுடில்லியில் இருக்கும் எமது நிருபர் மீனா ஆறுமுகம்.

"இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தனித்துவம் வாய்ந்தது. ஒவ்வொன்றின் முதலீட்டு வாய்ப்புகளும், வளர்ச்சித் திட்டங்களும் வேறுபடுகின்றன".

"புதுடில்லியைத் தாண்டி இந்தியாவின் ஒடிஷா போன்ற மாநிலங்களும் சிங்கப்பூருடன் இணைந்து பணியாற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன".

"வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலமாகப் பார்க்கப்பட்ட ஒடிஷா தற்போது முக்கியத் தொழில்வள மாநிலமாக உருமாறியிருக்கிறது".

"ஒடிஷா மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றங்களையும் தொழில்துறை வளர்ச்சியையும் எதிர்பார்க்கிறது…..அதற்குரிய வளங்கள், ஆராய்ச்சி, மனிதவளம், திறன்கள் போன்றவற்றை மேம்படுத்திக்கொள்ளவும் விரும்புகிறது".

"இந்தியாவின் நம்பிக்கை அளிக்கும் பொருளாதாரமாக விளங்கும் ஒடிஷா மாநிலத்தில் முதலீட்டு வாய்ப்புகளை மிகச்சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று சிங்கப்பூர் நிறுவனங்கள் நம்புகின்றன".
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்