கண்களைப் பாதுகாப்பது எப்படி?
வாசிப்புநேரம் -
(படம்: Envato Elements)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரர்கள் அதிகமாக மருத்துவப் பரிசோதனைகளுக்குச் செல்கின்றனர்; தொடர்ந்து உடற்பயிற்சி செய்கின்றனர்.
அண்மையில் தேசிய சுகாதார ஆய்வில் அது தெரியவந்தது.
உடல்நலத்தைக் கவனித்துக்கொள்ளும் சிங்கப்பூரர்கள் கண்களைப் பார்த்துக்கொள்வதில் கவனம் செலுத்துகிறார்களா?
இன்று உலக பார்வை தினம்!
கண்களை எப்படிப் பாதுகாக்கலாம் என்று தெரிந்துகொள்ளலாமா?
👀 அதிக நேரம் திரையைப் பார்க்கக்கூடாது
நீண்ட நேரத்திற்குத் திரையைப் பார்க்கும்போது கண் சிமிட்டுவது குறைகிறது.
அதனால் கண்கள் விரைவாக வறண்டு போகலாம்.
கண்களில் எரிச்சலும் சோர்வும் ஏற்படும்.
👀 கண்களைத் தேய்க்கக்கூடாது
கண்களைத் தேய்த்தால் விழிப்படலத்தில் (cornea) நுண்ணிய கீறல்கள் ஏற்படலாம்.
கண்களை அழுத்தமாகத் தேய்த்தால் கண்பார்வை பாதிக்கப்படக்கூடும்.
👀 விழியொட்டு வில்லைகளை (Contact Lens) அதிகம் பயன்படுத்தக்கூடாது
விழியொட்டு வில்லைகளை அதிக நேரத்திற்குப் பயன்படுத்தக்கூடாது.
அவற்றை அணிந்தபடி உறங்கினால் கண்கள் பாதிக்கப்படும்.
கடலில் அல்லது நீச்சல் குளத்தில் நீந்தினால் தொற்று ஏற்படலாம். அது பார்வை இழப்புக்குக் கூட இட்டுச் செல்லலாம்.
👀 கருப்புக் கண்ணாடி அணியலாம்
சூரியனின் புறஊதாக் கதிர்கள் (ultraviolet rays) சருமத்தை மட்டுமன்றி கண்களையும் பாதிக்கின்றன.
புறஊதாக் கதிர்களின் தாக்கம் அதிகமாக இருந்தால் கண்ணில் புற்றுநோய் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படலாம்.
அதைத் தவிர்க்க கண்ணாடி அணியலாம்.

ஆதாரம் : Others