தொகுதி எல்லைகளில் பெரிய மாற்றங்கள் - எதிர்த்தரப்பு அரசியல் கட்சிகள் கருத்து

(கோப்புப் படம்: CNA/Calvin Oh)
பாட்டாளிக் கட்சி கடந்த சில ஆண்டுகளாகப் பணியாற்றிய இடங்களில் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக அக்கட்சி கூறியிருக்கிறது.
நேற்று (11 மார்ச்) தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு வெளியிட்ட அறிக்கை குறித்து அது கருத்துரைத்தது.
இதற்கிடையே சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி, எதிர்வரும் பொதுத்தேர்தலில் தொகுதி எல்லைகளில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டதற்கான காரணத்தைக் கேட்டுள்ளது.
வெறும் 9 தொகுதிகளில் மட்டும் மாற்றங்கள் செய்யப்படவில்லை என்பதை அது சுட்டிக்காட்டியது.
தொகுதி எல்லைகள் மாற்றப்பட்டதற்கான காரணங்கள்
இம்முறை அறிக்கையில் விவரிக்கப்பட்டதை அறிந்து மகிழ்ச்சி அடைவதாக அது சொன்னது.
இருப்பினும் பெரும்பாலான முடிவுகளுக்குப் பின்னால் உள்ள காரணங்கள் வெளியிடப்படவில்லை என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி கூறியது.
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி, தான் முன்பு போட்டியிட்ட யூஹுவா (Yuhua), புக்கிட் பாத்தோக் (Bukit Batok ) தனித்தொகுதிகள் இந்த பொதுத்தேர்தலில் இடம்பெறாதது குறித்து வருத்தம் தெரிவித்தது.