Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

நொடித்துப்போன அமெரிக்க வங்கிகள்.... மீண்டும் ஒரு நிதி நெருக்கடிக்கான அறிகுறியா?

வாசிப்புநேரம் -

அமெரிக்காவில் அண்மையில் Silicon Valley வங்கியும் (SVB) Signature வங்கியும் (SB) திடீரென மூடப்பட்டன.

2008ஆம் ஆண்டு நிதி நெருக்கடிக்குப் பிறகு வங்கிகள் நொடித்துப்போனதால் அமெரிக்கா சந்திக்கும் ஆகப் பெரிய நெருக்கடி இது.

இதனால் உலகளவில் மீண்டும் ஒரு நிதி நெருக்கடி ஏற்படவுள்ளதா என்ற அச்சம் பலரிடையே நிலவுகிறது.

ஆனால் SVB, SB ஆகிய இரு வங்கிகளின் வீழ்ச்சிக்கும் அவற்றின் வர்த்தகக் கட்டமைப்பே காரணம் என்கிறார் Aboitiz Data Innovation நிறுவனத்தின் முதன்மை பொருளாதார வல்லுநர் டாக்டர் ஜெயரெத்தனம் பிள்ளை.

"SVB, SB ஆகிய வங்கிகளின் வர்த்தக அமைப்பு, மோசமான மேற்பார்வையின்மை, அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதத்தை அதிகரித்தது ஆகியவை அவற்றின் சரிவுக்குக் காரணம்."

"அது இன்னொரு பொருளியல் நெருக்கடிக்கான அறிகுறி அல்ல."

"சுலபமாக, எளிதில் பணம் கிடைக்கக்கூடிய காலக்கட்டம் முடிவுக்கு வருவதையே அது குறிக்கிறது."

என்றார் அவர்.

ஆனால் இன்னும் சில வங்கிகள் நொடித்துப்போகக்கூடும் என்று கூறப்படுவதாக டாக்டர் ஜெயரெத்தனம் குறிப்பிட்டார்.

"இருப்பினும் இந்தச் சூழல் கண்காணிக்கப்படவில்லை என்றால் அது கடுமையான உலக நிதிச் சிக்கலுக்கு இட்டுச் செல்லலாம்."

என்று அவர் எச்சரித்தார்.

ஆசியாவில் தாக்கம்?

இரு வங்கிகளின் சரிவால் ஆசியா அதிகம் பாதிக்கப்படாது என்று டாக்டர் ஜெயரெத்தனம் குறிப்பிட்டார்.

"வங்கிகளின் சரிவால் அமெரிக்க மத்திய வங்கி அதன் வட்டி விகிதம் குறித்து எடுக்கும் முடிவில் மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் ஆசிய வங்கிகள் அதிகம் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு இல்லை."

என்றார் அவர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்