சிவப்புக் கண்...வெள்ளி உரோமம்...சிங்கப்பூரில் புதிய குரங்கு
வாசிப்புநேரம் -

Instagram/photoraemon
சிங்கப்பூரில் முதல்முறையாக Silvered Langur வகைக் குரங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவப்புக் கண்...சாம்பல்-வெள்ளி உரோமம்...
சிறிய குரங்கு கிளமெண்டி உட்ஸ் பார்க்கில் (Clementi Woods Park)இம்மாதம் 5ஆம் தேதி காணப்பட்டது.
'என்னவோ உறுமும் சத்தம் கேட்டது. முதலில் காட்டுப்பன்றி என்று எண்ணினேன். மரத்தில் குரங்கு இருந்தது,' என்று அதைக் கண்ட ஆடவர் Instagram-இல் பதிவிட்டார்.
Silvered Langur குரங்குகள் புருணை, இந்தோனேசியா, மலேசியா ஆகியவற்றில் பொதுவாகக் காணப்படும்.
சிங்கப்பூரில் அவை இருந்ததில்லை என்று தேசியப் பூங்காக் கழகம் சொன்னது.
Silvered Langur குரங்குகள் 46 செண்டிமீட்டர் முதல் 56 செண்டிமீட்டர் வரை வளரும்.
அவற்றின் வால் உடலைவிட நீளமாக வளரக்கூடும்.
அவை பொதுவாக மனிதர்களை நெருங்கமாட்டா. அவற்றை நெருங்கவேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இப்போதைக்குக் குரங்குகளைக் கண்காணிக்கவுள்ளதாகக் கழகம் சொன்னது.
இந்தக் குரங்கு எப்படி சிங்கப்பூருக்கு வந்தது என்று இணையவாசிகள் யோசிக்கின்றனர்.

ஆதாரம் : Others