Skip to main content
முன்னாள் கைதிகளுக்கு $600 விருது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

முன்னாள் கைதிகளுக்கு $600 விருது

வாசிப்புநேரம் -
முன்னாள் கைதிகள் கூடுதல் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு ஏதுவாக இணக்கக் குறிப்பு கையெழுத்தாகியுள்ளது.

சிம் (SIM) என்ற சிங்கப்பூர் நிர்வாகக் கல்வி நிலையத்தின் மக்கள் மேம்பாட்டு நிதியும் மஞ்சள் நாடா சிங்கப்பூர் அமைப்பும் அதனைச் செய்துகொண்டன.

முன்னாள் சிம் பல்கலைக்கழகம் அந்த நிதியாதரவுத் திட்டத்தை நிறுவியது.

சில்லறை விற்பனை, உணவு-பானம், அழகுப் பராமரிப்பு, உடல்நலம் உள்ளிட்ட துறைகளில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளும் முன்னாள் கைதிகளுக்கு SIMPDF எனும் சிம் மக்கள் முன்னேற்ற விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொருவரும் 600 வெள்ளி பெறுவர்.

மொத்தம் 150,000 வெள்ளி மதிப்புள்ள அந்தத் திட்டம் அடுத்த ஆண்டு தொடங்கி 2028வரை நீடிக்கும்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்