Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தானா மேரா, சீமெய் ரயில் நிலையங்கள் 10 நாள்களுக்கு மூடப்பட்டிருக்கும்

வாசிப்புநேரம் -
தானா மேரா, சீமெய் ரயில் நிலையங்கள் 10 நாள்களுக்கு மூடப்பட்டிருக்கும்

படம்: CNA/Wallace Woon

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தானா மேரா (Tanah Merah), சீமெய் (Simei) ரயில் நிலையங்கள் 10 நாள்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கிழக்கு - மேற்கு ரயில் தடத்தைப் புதிய பணிமனையுடன் இணைக்கும் வேலை நடப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

நவம்பர் 29ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 8ஆம் தேதி வரை பிடோக்கிலிருந்து (Bedok) தெம்பனிஸ் வரையிலும் (Tampines) தானா மேராவிலிருந்து எக்ஸ்போ வரையிலும் (Expo) ரயில் சேவை செயல்படாது.

சுமார் 180,000 பேர் பாதிக்கப்படுவர் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்திருக்கிறது.

10 நாள்களுக்குப் பயணிகளுக்கு இடைவழிப் பேருந்துச் சேவையும் வழங்கப்படும்.

பேருந்து எண் 7 பிடோக்கிலிருந்து தெம்பனிஸ் வரை செயல்படும். தானா மேரா, சீமெய் ஆகிய நிலையங்களில் இருந்தும் பயணிகளை ஏற்றிச்செல்லும். 3இலிருந்து 5 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து அனுப்பப்படும்.

பேருந்து எண் 8 பிடோக்கிலிருந்து எக்ஸ்போ வரை செயல்படும். தானா மேராவுக்கும் செல்லும். 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து அனுப்பப்படும்.

ரயிலில் பயணம் செய்யும்போது செலுத்தும் அதே அளவு கட்டணத்தை இடைவழிப் பேருந்துகளிலும் செலுத்தவேண்டும்.

டிசம்பர் 9ஆம் தேதி ரயில் சேவை வழக்கநிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தானா மேராவில் புதிய ரயில் தளமேடை உருவாக்கப்படவிருக்கிறது. பாசிர் ரிஸ்ஸை (Pasir Ris) நோக்கிச்செல்லும் ரயில்கள் அந்தத் தளமேடையைப் பயன்படுத்தும்.

மேற்குத் திசையில் பயணம் செய்வோர் பாதிக்கப்படமாட்டார்கள்.

மற்ற ரயில் நிலையங்களிலும் சேவைகள் தாமதம் அடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உச்ச நேரத்தில் பயா லேபாரிலிருந்து (Paya Lebar) பிடோக் வரை 8 நிமிடங்களுக்கு ஒரு ரயில் செயல்படும். மற்ற நேரங்களில் 17 நிமிடங்களுக்கு ஒரு ரயில் செயல்படும்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்