Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

சிண்டாவின் உன்னத விருது பெற்ற ஒவ்வொரு மாணவரும் பல சவால்களைத் தாண்டியவர்கள்... அவர்களில் சிலரின் கதைகள்...

வாசிப்புநேரம் -

சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் இன்று  782 மாணவர்களுக்கு உன்னத விருதை வழங்கி அவர்களைக் கெளரவித்துள்ளது. 

சிண்டா உன்னத விருதைப்  பெற்ற மாணவர்கள் சிலரிடம் 'செய்தி' பேசி அவர்களின் கதையைத் தெரிந்துகொண்டது. 

ஒற்றைத் தாயாரின் துணையுடன் இரட்டைப் பட்டம்...

"எதைச் செய்தாலும் தன்னம்பிக்கையுடன் செய்யவேண்டும்...  சாதிப்போம் என்ற நம்பிக்கையுடன் ஈடுபடவேண்டும்!"

என்கிறார் ஒற்றைத் தாயாரின் துணையோடு, கணக்கியல், வணிக நிர்வாகம் ஆகிய துறைகளில்  இரட்டைப் பட்டம் பெற்ற மாணவர் கஜேந்திரன். 

வயது தடையில்லை!

"எச்சூழலிலும் வயது தடையாக இருக்காது. தன்னம்பிக்கையும் முயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்!"

நிதிச் சுமையால் படிப்பைப்  பாதியில் கைவிட நேர்ந்து பிறகு மீண்டும் கல்விப் பயணத்தைத் தொடரும் சர்ச்சில் பார்த்திபன் அவ்வாறு கூறினார்.

எதைத் தொடங்குவதற்கு முன்பம் முடிவு என்னவாக இருக்கவேண்டும் என்று யோசிப்பது நல்லது!

"படிப்பைத் தொடரவேண்டும் என்று முடிவுசெய்தபோது பல சவால்களைச் சந்தித்தேன். வேலை செய்யும்போது படிப்பது சுலபமல்ல. நேரத்தைச் சமாளிப்பது மிகவும் முக்கியம். " 

என்றார் குடும்ப நிதிச் சுமையைச் சமாளிக்கப் பகுதிநேரமாக வேலை பார்த்துக் கல்வி பயின்று லசால் கலைக்கல்லூரியில் பட்டம்பெற்ற நூர் ஹஸ்லினா.

சிரமத்தை எதிர்கொண்டு மனவுறுதியுடன் செயல்பட்டேன்

 "உன்னால் உள்ளூர்ப் பல்கலைக்கழகத்துக்குச் செல்ல முடியாது என்று கூறியவர்கள் சொன்னது தவறு என்பதை நிரூபிக்க உழைத்தேன்"

என்கிறார் மிகக் கடினமாக உழைத்து சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத் துறையில் படிக்கும் தங்கப் பதக்கம் பெற்ற மாணவி வள்ளியம்மை லெட்சுமணன்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்