சிங்கப்பூர் இந்தியர்களின் அக்கறைக்குரிய அம்சங்களைக் கண்டறிந்து அடுத்த 5 ஆண்டுக்கான முன்னேற்றத் திட்டம் வகுக்கப்படும்: முரளி பிள்ளை
வாசிப்புநேரம் -
படம்: SINDA
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்டிருக்கும் புதிய குழு அதன் முதல் கலந்துரையாடல் நிகழ்வை நடத்தியிருக்கிறது.
புதிய குழு அமைக்கப்பட்டிருப்பது குறித்து உள்துறை அமைச்சர் கா சண்முகம் இந்த மாதம் 7ஆம் தேதி அறிவித்தார்.
சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (SINDA) நேற்று நடந்த முதல் கலந்துரையாடலை ஏற்று நடத்தியது.
அதில் இந்து சமய அமைப்புகளைச் சேர்ந்த 18 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூர் இந்தியச் சமூகம் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளை அடையாளம் காண்பது கலந்துரையாடலின் நோக்கம்.
ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் சட்ட, போக்குவரத்துத் மூத்த துணையமைச்சர் முரளி பிள்ளை, பல்வேறு இந்திய அமைப்புகளுடன் இணைந்து இனி பல கலந்துரையாடல்களை நடத்தவிருப்பதாகக் கூறினார்.
மற்றொரு இணைத் தலைவரான கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸின் தலைமையில் சில சந்திப்புகள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கலந்துரையாடல்களின் மூலம் பெறப்படும் யோசனைகளை புதிய ஒருங்கிணைப்புக் குழு பரிசீலிக்கும்.
இந்தியர்களின் முக்கிய அக்கறைக்குரிய அம்சங்கள் கண்டறியப்படும். அதன் அடிப்படையில் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியச் சமூகத்தின் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் வகுக்கப்படும் என்றார் திரு முரளி பிள்ளை.
குறிப்பாகக் குறைந்த வருமானம் ஈட்டும் இந்தியக் குடும்பங்களுக்கு உதவ அமைப்புகள் எப்படி இணைந்து செயல்படலாம் என்பதற்கு வழிகள் ஆராயப்படும் என்றார் திரு முரளி.
இந்தியச் சமூகத்தின் முன்னேற்றத்துக்கான இந்தக் கூட்டு முயற்சியில் சிண்டா வழங்கும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார் அவர்.

ஆதாரம் : Mediacorp Seithi