Skip to main content
பணத்தை என்ன செய்வது? பெண்களுக்குப் பயிலரங்கு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

பணத்தை என்ன செய்வது? பெண்களுக்குப் பயிலரங்கு

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பணத்தை என்ன செய்யலாம்? எப்படிச் செலவு செய்யலாம்? எவ்வளவு சேமிக்கலாம்?

இது பொதுவாக எல்லாருக்கும் உள்ள கேள்வி.

அது பற்றிய ஒரு பயிலரங்கு நடந்தது.

மாதம் சராசரியாக எவ்வளவு செலவாகிறது என்பதை எவ்வாறு அறிந்துகொள்வது?

கடன்களை நிர்வகிப்பது எப்படி?

அவசர காலத்துக்குச் சேமிப்பது ஆகியவை தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்.

பெண்கள், குறிப்பாக இல்லத்தரசிகள் நிதிகளைக் கையாளும் திறன்களைக் கற்றுக்கொள்ளவேண்டும்.

அவர்களுக்காகவே நிதி நிர்வாகப் பயிலரங்கைச் சிண்டாவும் இந்திய முஸ்லிம் சமூகச் சேவை மன்றமும் நடத்தின.

முதன்முறையாக இரு அமைப்புகளும் ஒன்றுசேர்ந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

நிதித் திறன்களைக் கற்றுக்கொடுக்கப் பல பட்டறைகள் நடந்தாலும் இந்தியச் சமூகத்திலுள்ள பெண்களுக்காகப் பிரத்யேகமாக இத்தகைய பயிலரங்கு நடத்தப்பட்டது இதுவே முதன்முறை என்று இந்திய முஸ்லிம் சமூகச் சேவை மன்றத்தின் தலைவர் அனிசா பருவீன் 'செய்தி'யிடம் கூறினார்.

குடும்பங்களின் வரவுசெலவைப் பார்த்துக்கொள்வது பெரும்பாலும் இல்லத்தரசிகளின் பொறுப்பு என்பதால் அவர்கள் நிதி நிர்வாகத் திறன்களைக் கற்றுக்கொள்ளும்போது குடும்பங்களும் பயனடையும் என்று திருமதி அனிசா குறிப்பிட்டார்.

இன்று பீஷானிலுள்ள அன்-நஹ்டா (An-Nahdhah) பள்ளிவாசலில் பயிலரங்கு தமிழில் நடத்தப்பட்டது.

சுமார் 100 பெண்கள் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்