SINDA Project Give - சமூகத்தைத் தூக்கி நிறுத்த ஒன்றிணைந்த முயற்சி
படம்: தமிழவேல்
This audio is generated by an AI tool.
செம்பவாங் குழுத்தொகுதி குடியிருப்பாளர்கள் இன்றே தீபாவளிக் கொண்டாட்டத்தில் திளைக்கத் தொடங்கிவிட்டனர்.
சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (SINDA) ஏற்பாடு செய்த Project Give Heartlands (PGH) நிகழ்ச்சி!
சிண்டாவின் வருடாந்திரத் திட்டத்தின் ஓர் அங்கமாக தீவின் எட்டு இடங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
தீபாவளி உணர்வை குடியிருப்புப் பேட்டைகளுக்கே கொண்டு செல்வது நிகழ்ச்சியின் நோக்கம்.
அதன் ஓர் அங்கமாக உட்லண்ட்ஸில் உள்ள Ace the Place சமூக மன்றத்தில் நடைபெற்றது.
இவ்வாண்டு வசதி குறைந்த 2,350 குடும்பங்களுக்கு அன்பளிப்புப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.
இது கடந்த ஆண்டைவிட 47 விழுக்காடு அதிகம்.
இன்றைய நிகழ்ச்சியில் 300 குடும்பங்களுக்கு மளிகைப் பொருள்கள் வாங்க $120 பற்றுச்சீட்டுகளும் கொடுக்கப்பட்டன.
இதற்காக தொண்டூழியர்கள், இளையர் குழுக்கள், பங்குதாரர்கள் என கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்தனர்.
செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விக்ரம் நாயரும் இங் ஷி சுவானும் (Ng Shi Xuan) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அன்பளிப்புப் பைகளை வழங்கினர்.
லிட்டில் இந்தியாவின் உணர்வைக் கொண்டுவர லிஷா எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கம் பல கடைகளை அமைத்துள்ளது.
SG60 கொண்ட்டாட்ட உணர்வைப் பரதிபலிக்க, 60கள், 70களில் உள்ள உணவுக் கடைகளும் இடம்பெற்றன.
சிண்டா, லிஷா, மீடியாகார்ப் வசந்தம் ஒளிவழி, நற்பணிப் பேரவை ஆகியவை நிகழ்ச்சியை இணைந்து நடத்துகின்றன.
"நமது பங்குதாரர்கள், தொண்டூழியர்கள், நன்கொடையாளர்கள் ஆகியோர் சமூகத்தைத் தூக்கி நிறுத்த ஒன்றிணைவது இந்த முயற்சியின் முதுகெலும்பாக அமைகிறது," என்றார் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன்.