Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

உலகில் அதிக மதிப்புள்ள நோட்டுகளில் சிங்கப்பூரின் $10,000 நோட்டும் ஒன்று.. தெரியுமா?

வாசிப்புநேரம் -
உலகில் அதிக மதிப்புள்ள நோட்டுகளில் சிங்கப்பூரின் $10,000 நோட்டும் ஒன்று.. தெரியுமா?

(படம்: Monetary Authority of Singapore)

சிங்கப்பூரில் அண்மையில் 10,000 வெள்ளி போலி நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்தோனேசியர்கள் சிலர் சூதாட்ட நிலையத்தில் நோட்டுகளைப் பயன்படுத்தியபோது அவை அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தன.

இந்தோனேசியாவில் ஒரு குழு போலி நோட்டுகளைத் தயாரிப்பதும் அது நோட்டுகளை விநியோகிப்பதும் தெரியவந்தது.

இந்தோனேசிய அதிகாரிகளுடன்  இணைந்து குழுவை ஒழித்ததாகச் சிங்கப்பூர்க் காவல்துறை கூறியது. 

உலக நாடுகளில் தற்போது பயன்பாட்டில் உள்ள அதிக மதிப்புள்ள நோட்டுகளில் சிங்கப்பூரின் 10,000 வெள்ளி நோட்டும் ஒன்று...தெரியுமா?

Related article image
(படம்: Monetary Authority of Singapore)

சிங்கப்பூரில் 2014ஆம் ஆண்டு அக்டோபரிலிருந்து 10,000 வெள்ளி நோட்டுகள் அச்சிடப்படுவதில்லை.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் நடவடிக்கைகளைத் தடுக்க அவை அச்சடிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. 

ஏற்கெனவே அச்சிடப்பட்ட நோட்டுகள் மட்டும் தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

(படம்: Monetary Authority of Singapore)

அதே காரணத்துக்காக 1,000 வெள்ளி நோட்டுகளை அச்சிடுவதையும் 2021ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூர் நிறுத்தியது.

தொடர்ந்து அச்சிடப்படும் நோட்டுகள் யாவை?

  • $2
  • $5
  • $10
  • $50
  • $100

தற்போது அச்சிடப்படுவதில்லை...ஆனால் ஏற்றுக்கொள்ளப்படும் நோட்டுகள்? 

சிங்கப்பூரில் 1967ஆம் ஆண்டிலிருந்து வெளியிடப்பட்ட அனைத்து நாணயங்களும் நோட்டுகளும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. 

அதேபோல் $1, $20, $25 ஆகிய நோட்டுகள்  அச்சிடப்படுவதில்லை என்றாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

ஒரு வெள்ளி நோட்டு

Related article image
(படம்: Monetary Authority of Singapore)

அவை 1999-ஆம் ஆண்டு வரை அச்சிடப்பட்டன.

20 வெள்ளி நோட்டு

Related article image
(படம்: Monetary Authority of Singapore)
--1984ஆம் ஆண்டு வரை அச்சிடப்பட்டன.
Related article image
(படம்: Monetary Authority of Singapore)

---புருணையும் சிங்கப்பூரும் இருநாடுகளும் ஒன்று மற்றதன் நாணயத்தையும் நோட்டையும் ஏற்றக்கொள்ள பல காலமாக இணங்கியுள்ளன.  

ஒப்பந்தத்தின் 40ஆம் ஆண்டு நிறைவு 2007ஆம் ஆண்டு அனுசரிக்கப்பட்டது. அப்போது 20 வெள்ளி சிறப்பு நோட்டுகள் அச்சிடப்பட்டன.

Related article image
(படம்: Monetary Authority of Singapore)

---2019இல் சிங்கப்பூரின் 200ஆம் ஆண்டு அனுசரிக்கப்பட்டது. அதை ஒட்டி 20 வெள்ளி சிறப்பு நோட்டுகள் அச்சிடப்பட்டன.

25 வெள்ளி நோட்டு

Related article image
(படம்: Monetary Authority of Singapore)
--1976ஆம் ஆண்டு வரை அச்சிடப்பட்டன.
Related article image
(படம்: roots.gov.sg)

--1996ஆம் ஆண்டில் சிங்கப்பூர் நாணய வாரியம் நிறுவப்பட்டு 25ஆம் ஆண்டு நிறைவை அனுசரிக்க 25 வெள்ளி சிறப்பு நோட்டுகள் அச்சிடப்பட்டன.

500 வெள்ளி நோட்டு 

Related article image
(படம்: Monetary Authority of Singapore)
-- அவை 1999-ஆம் ஆண்டு வரை அச்சிடப்பட்டன.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்