சிங்கப்பூரில் கடந்த ஆண்டு 129 கத்திக்குத்துச் சம்பவங்கள்
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு 129 கத்திக்குத்துச் சம்பவங்கள் பதிவாயின.
கடந்த மூவாண்டு நிலவரத்துடன் ஒப்பிடுகையில் அது அவ்வளவாக மாறவில்லை.
கத்திக்குத்துச் சம்பவங்கள் அதிகரித்துள்ளனவா என்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு உள்துறைத் துணையமைச்சர் சுன் ஷுவேலிங் (Sun Xueling) பதிலளித்தார்.
2021க்கும் 2023க்கும் இடைப்பட்ட காலத்தில் ஓவ்வோர் ஆண்டும் சராசரியாக 133 சம்பவங்கள் பதிவாயின.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் St Joseph’s தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தவிர எந்தக் கத்திக்குத்துச் சம்பவமும் வழிபாட்டுத் தலத்தில் இடம்பறவில்லை.
சம்பவங்கள் பெரும்பாலும் கொலை, கொலை முயற்சி, கொள்ளை தொடர்பில் நடந்ததாகத் திருவாட்டி சுன் சொன்னார்.
கத்திகள் சம்பந்தப்பட்ட குற்றங்களைக் கையாள்வதற்குக் காவல்துறையினர் தயாராக உள்ளனர் என்று சொன்ன அவர் சமூகத்தினரையும் அவற்றுக்குத் தயாராக்க முயற்சி எடுக்கப்படுவதாகக் கூறினார்.
"கத்திகள் பயன்படுத்தப்படும் குற்றங்கள் குறைவாக இருந்தாலும் அவற்றை எப்படிச் சமாளிப்பது என்று அனைவரும் தெரிந்துகொள்வது நல்லது," என்று அவர் சொன்னார்.