Skip to main content
"சினிமாவில் எதுவும் சாத்தியம்!"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

error

  • Could not retrieve the oEmbed resource.

சிங்கப்பூர் exclusive

"சினிமாவில் எதுவும் சாத்தியம்!" - Monkey Man திரைப்படப் புகழ் நடிகர் மதியழகன்

வாசிப்புநேரம் -
பிரிட்டிஷ் நடிகர் தேவ் பட்டேல் (Dev Patel) முதல்முறையாக இயக்கிய திரைப்படம் "Monkey Man".

அது கடந்த வாரம் சிங்கப்பூர்த் திரையரங்குகளுக்கு வந்தது.

படத்தைப் பார்த்தவர்கள் அதில் நடித்த மிகவும் பரிச்சயமான நடிகரையும் பார்த்திருப்பர்.

அவர் வேறு யாரும் அல்ல....சிங்கப்பூரின் பிரபல நடிகர் மதியழகன்.

ஹாலிவூட் திரைப்படத்தில் நடித்த மதியழகனிடம் அவரது அனுபவங்களைக் கேட்டது "செய்தி".

Instragramஇல் தொடர்புகொண்டனர்....

"சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் பல படங்களில் நடித்துள்ளேன். குறிப்பாகச் சிங்கப்பூரில் நிறைய ஆங்கிலத் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்த அனுபவம் இருந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டு படக்குழுவினர் Instragram வாயிலாகத் தொடர்புகொண்டனர்" என்றார் மதியழகன்.

ஏற்கனவே ஆங்கிலப் படமொன்றில் நடிக்க முயற்சி செய்துள்ள அவர் இம்முறை படப்பிடிப்பு இந்தோனேசியாவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டதால் மிகவும் உற்சாகம் அடைந்ததாகக் கூறினார்.

3 கதாப்பத்திரங்களை முயற்சித்தேன்.....

"அரசியல்வாதி, துப்பாக்கி விற்பவர், குண்டர் கும்பலைச் சேர்ந்தவர் - இந்த 3 கதாப்பத்திரங்களையும் நடித்து அதனைப் பதிவுசெய்து படக்குழுவுக்கு அனுப்பினேன். படத்தில் மும்பையில் சட்டவிரோதமாகத் துப்பாக்கி விற்பனை செய்யும் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்தேன்" என்றார் அவர்.

படபிடிப்புக்காக ஒரு மாதம்....

"அது COVID-19 காலம். படப்பிடிப்புக்காக இந்தோனேசியா சென்றதும் 2 வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டேன். பின்னர் மூன்றரை நாள்கள் படப்பிடிப்பு நடந்தது. மேலும் சில நாள்கள் அங்குத் தங்கியிருந்து பிறகு சிங்கப்பூருக்குத் திரும்பினேன்"

கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கும் மேல் படப்பிடிப்புக்காகச் செலவிட்டதாக மதியழகன் சொன்னார்.

"சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரே கலைஞர் என்பதால் படக்குழுவினர் என்னை நன்றாகக் கவனித்துக்கொண்டனர்".

"இந்தி, இந்தோனேசிய, மலேசியக் கலைஞர்கள், சண்டைக் காட்சியில் நடித்தவர்கள் எனப் பலதரப்பட்ட கலைஞர்களை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு நல்ல அனுபவமாக இருந்தது" என்றார் அவர்.

அனுபவங்கள் வாயிலாகக் கிடைத்தது?

கொரோனா சூழ்நிலையிலும் இந்தோனேசியாவில் படக்குழுவினர் அமைத்திருந்த படப்பிடிப்புத்தளம் மிகவும் அற்புதமாக இருந்ததை அவர் சுட்டினார்.

"இந்தியாவின் மும்பை நகரத்தை அப்படியே நேரில் பார்தததுபோல் இருந்தது. சினிமாவில் எதுவும் சாத்தியம் என்பதை உறுதியாக நம்பினேன்".

"சுமார் 15 நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் படப்பிடிப்பில் ஈடுபட்டனர்; அவர்கள் பேசியது ஒரு மொழி - அதுதான் சினிமா"

சினிமாவின் ஆற்றல் என்ன என்பதை அப்போது உணர்ந்ததாக அவர் சொன்னார்.

இனி நடிக்க விரும்பும் கதைக்களங்கள்?

"நல்ல விறுவிறுப்பான "Action" படங்கள் வாயிலாக உணர்வுப்பூர்வமான கதைகளைச் சொல்ல முடியும் என்பதை உணர்ந்தேன். எனவே அத்தகைய படங்கள் கிடைத்தால் எனக்கு மகிழ்ச்சிதான்" என்றார் அவர்.

திரு மதியழகனின் திரை உலகப் பயணம் இன்னும் வளர வாழ்த்துவோம்!
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்