லண்டனிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்ட SIA விமானம் திருப்பிவிடப்பட்டது

(படம்: Twitter/Courtesy of Holger Knecht)
லண்டனிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) விமானம் தொழில்நுட்பக் கோளாற்றால் ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் நகருக்குத் (Frankfurt) திருப்பிவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹீத்ரோ (Heathrow) விமான நிலையத்திலிருந்து நேற்று புறப்பட்ட SQ317 விமானத்தில் 379 பயணிகளும் 27 சிப்பந்திகளும் இருந்ததாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியது.
எந்த பிரச்சினையும் இல்லாமல் உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணி வாக்கில் அந்த Airbus A380 ரக விமானம் ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
பயணிகளுக்கு உதவி செய்ய ஏற்பாடுகள் செய்வதாகக் கூறிய நிறுவனம் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டது.