Skip to main content
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் power bank பயன்படுத்தத் தடை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் power bank பயன்படுத்தத் தடை

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் power bank பயன்படுத்தத் தடை

படம்: Singapore Airlines

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) விமானங்களில் power bank என்ற மின்னூட்டம் செய்யும் சாதனங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை Scoot விமானங்களுக்கும் பொருந்தும்.

அது ஏப்ரல் முதல் தேதி நடப்புக்கு வருவதாக Facebook தளத்தில் நிறுவனம் பதிவிட்டது.

எனினும் power bank சாதனங்களை விமானங்களுக்குள் கொண்டுவர அனுமதி உண்டு.

பயணிகள் அவற்றைக் கையோடு எடுத்துச்செல்லும் பைகளில் வைத்திருக்கலாம் என்று SIA சொன்னது.

பயணிகள் 100Wh வரை ஆற்றல்கொண்ட சாதனங்களை வைத்திருக்கமுடியும்.

அதற்கு அதிகமான ஆற்றல் கொண்ட சாதனங்களுக்கு சிறப்பு அனுமதி பெறவேண்டும் என்று SIA கூறியது.

விமானத்துக்குள் Powerbank சாதனங்கள் வெடித்த சம்பவங்களைத் தொடர்ந்து, அண்மையில் தென்கொரியா, தைவான், தாய்லந்து ஆகியவற்றின் சில விமானச் சேவைகள் power bank பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளன.

ஆதாரம் : Others/Facebook

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்