Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

நிலப்பகுதிகளை மாற்றிக்கொள்ள சிங்கப்பூரும் ஜொகூர் அரச குடும்பமும் இணக்கம்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரும் மலேசியாவின் ஜொகூர் மாநில அரச குடும்பமும் ஹாலந்து ரோட்டில் அவற்றுக்குச் சொந்தமான இரண்டு நிலப்பகுதிகளை மாற்றிக்கொள்ள இணங்கியிருக்கின்றன.

அவ்விரண்டு நிலப்பகுதிகளின் விலையும் சமமானவை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பூமலைக்கு அருகில் சுமார் 21 ஹெக்டர் நிலத்தை ஜொகூர் அரச குடும்பம் பல தலைமுறைகளாக வைத்திருக்கிறது.

ஒப்பந்தத்தின்படி ஜொகூர் பட்டத்து இளவரசரும் ஆட்சியாளருமான தெங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் தமது நிலத்தில் 13 ஹெக்டரை சிங்கப்பூர் அரசாங்கத்துக்குக் கொடுப்பார்.

டயர்சல் (Tyersall) அவென்யூவுக்கும் பூமலைக்கும் இடையில் அந்தப் பகுதி அமைந்துள்ளது.

அதற்குப் பதிலாக சிங்கப்பூர் அரசாங்கம் தனக்குச் சொந்தமான நிலத்தில் எட்டரை ஹெக்டரை அவரிடம் வழங்கும்.

சிங்கப்பூர் கொடுக்கவிருக்கும் நிலம் ஜொகூர் அரச குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ளது.

ஜொகூர் ஆட்சியாளர் தமது நிலத்தில் திட்டமிட்டுள்ள மேம்பாடுகள் யுனெஸ்கோ உலக மரபுடைமைத் தலமான பூமலையிலிருந்து மேலும் தொலைவில் இருக்க நிலப் பரிமாற்றம் வழிசெய்யும்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்