Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரும் மலேசியாவும் நிறுவும் சிறப்புப் பொருளாதார வட்டாரம் - "20,000 வேலை வாய்ப்புகள் உருவாகும்"

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரும் மலேசியாவும் சிறப்புப் பொருளாதார வட்டாரத்தை அமைப்பது குறித்த
மேல்விவரங்களை வெளியிட்டுள்ளன.

அந்த வட்டாரம் ஜொகூரின் இஸ்கந்தர் மேம்பாட்டுப் பகுதியையும் பெங்கராங் வட்டாரத்தையும் உள்ளடக்கியிருக்கும்.

வட்டாரத்தில் உள்ள வர்த்தகங்கள் வரிச் சலுகைத் திட்டத்தின் மூலம் பயன்பெறவிருக்கின்றன.

மலேசியா வழிநடத்தும் ஒரு வர்த்தக நிலையமும் அங்கே இயங்கும்.

சிறப்புப் பொருளாதார வட்டாரம் அமைக்கப்பட்ட முதல் 10 ஆண்டுகளில் 100 திட்டங்கள் வரை செயல்படுத்த சிங்கப்பூரும் மலேசியாவும் முனைகின்றன.

அதன் வழி 20,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று நம்பப்படுகிறது.  

சிறப்புப் பொருளாதார வட்டாரத்தை அமைப்பதற்கான இணக்கக்குறிப்பு சுமார் ஓராண்டுக்கு முன்பு கையெழுத்தானது.

இன்று (7 ஜனவரி) அதன் உடன்பாட்டில் சிங்கப்பூர் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங்கும் (Gan Kim Yong) மலேசியப் பொருளியல் விவகார அமைச்சர் ரஃபிஸி ராம்லியும் (Rafizi Ramli) கையெழுத்திட்டனர்.

உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி போன்ற 11 துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஒப்பந்தம் வகைசெய்கிறது.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்