"சிங்கப்பூர் அணி வீரர்கள் பதக்க எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தனர்"
வாசிப்புநேரம் -
படம்: CNA/Wallace Woon
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஆசிய விளையாட்டுகளில் சிங்கப்பூர் வீரர்கள் பதக்க எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்திருப்பதாக விளையாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த முறை மேன்மேலும் தங்கப் பதக்கங்களை வெல்ல இலக்கு வைத்திருப்பதாக அவர்கள் கூறினர்.
ஆசிய விளையாட்டுகளின் நிறைவில் செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள் அதனைப் பகிர்ந்தனர்.
சிங்கப்பூர் வீரர்கள் இரண்டு தங்கம், ஒன்பது வெள்ளி, ஏழு வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
பலர் இம்முறை சாதனை படைத்தனர்.
சாந்தி பெரேரா 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார். ஆசிய விளையாட்டுகளின் 200 மீட்டர் ஓட்டத்தில் இரண்டு முறை தங்கம் வென்ற முதலாமவர் என்ற பெருமை சாந்தி பெரேராவைச் சேர்கிறது.
லோ கியான் யூ பேட்மிண்டனிலும் ஷேனன் டான் கோல்ஃபிலும் சிங்கப்பூரின் முதல் பதக்கங்களை வென்றனர்.
ஆனால் இரண்டு தங்கப் பதக்கங்கள் சிங்கப்பூரின் ஆகக் குறைவான தங்கப் பதக்க எண்ணிக்கை. கடைசியாக 1998ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அணி இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றது.
அது கவலை அளிக்கக்கூடிய தகவல் இல்லை என்று அதிகாரிகள் கூறினர். ஒவ்வொரு முறையும் ஆசிய விளையாட்டுகளில் போட்டிகள் மாறுவதால் பதக்க எண்ணிக்கையில் மாற்றங்கள் இருக்கும் என்று அவர்கள் விளக்கினர்.
வெள்ளி பதக்கம் வென்றவற்றில் தங்கம் வெல்வதில் இனி கவனம் செலுத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.