Skip to main content
ஆஸ்திரேலியாவுடன் மின்சார இணைப்பு?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஆஸ்திரேலியாவுடன் மின்சார இணைப்பு?

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியாவுடன் மின்சார இணைப்பு?

படம்: Facebook/Vivian Balakrishnan

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், பசிபிக் மின்சாரக் கட்டமைப்பை ஆஸ்திரேலியாவுடன் இணைக்கும் யோசனையை முன்வைத்திருக்கிறார்.

அதுபோன்ற கட்டமைப்பு எரிசக்திப் பாதுகாப்பைப் பலப்படுத்தலாம் என்றார் அவர்.

நாடுகளின் மின்சார உற்பத்திச் செலவு குறையலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

பசிபிக் தீவுக் கருத்தரங்கிற்கு இடையே டாக்டர் பாலகிருஷ்ணன் விவரங்களைப் பகிர்ந்தார்.

சிங்கப்பூர், எரிவாயுவைப் பயன்படுத்தும் இயந்திரங்களைக் கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

பசிபிக் நாடுகள் டீசல் மூலம் அதனைச் செய்வதாக அமைச்சர் பாலகிருஷ்ணன் கூறினார்.

அதனால் சிங்கப்பூரைவிடப் பசிப்பிக் நாடுகளில் மின்சாரச் செலவு அதிகமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இணைக்கப்பட்ட கட்டமைப்பின் மூலம் மின்சாரத்தைக் குறைந்த செலவில் உற்பத்தி செய்யலாம் என்றும் இன்னும் பெரிய அளவில் விநியோகிக்கலாம் என்று டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினார்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்