Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் நிறுவனங்கள் AI அம்சங்களைத் துரிதமாகச் செயல்படுத்த வாய்ப்பு

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் இனி செயற்கை நுண்ணறிவு அம்சங்களை இன்னும் துரிதமாகச் செயல்படுத்தமுடியும்.

அதற்கு உதவியாக அமையவிருக்கிறது Oracle நிறுவனத்தின் புதிய AI Centre of Excellence எனும் நிலையம்.

நிறுவனங்கள் அவற்றின் குழுக்களுக்குப் பயிற்சியளிக்க நிலையம் உதவும்.

பாதுகாப்பான மெய்நிகர் தளங்களில் சோதனைகளை மேற்கொள்ளவும் முக்கியச் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான அறிவாற்றலைப் பெறவும் நிலையம் வர்த்தகங்களுக்குக் கைகொடுக்கும்.

நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடிய வளங்கள் ஏராளம்.

அவற்றைச் சுகாதாரப் பராமரிப்பு, அரசாங்கம், நிதி, தொலைத்தொடர்பு உள்ளிட்ட தொழில்துறைகளில் பயன்படுத்தலாம்.

செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளைச் சிறியளவில் சோதனை செய்ய நிலையம் வர்த்தகங்களுக்கு வகைசெய்யும்.

தீர்வுகளை இன்னும் விரிவாகச் செயல்படுத்துவதற்குமுன் அவற்றின் ஆற்றலை மதிப்பிட அது உதவும்.

மெய்நிகர் தளங்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் நிலையம் பயிற்சியையும் சான்றிதழ்களையும் வழங்குகிறது.

அதை Oracle University அமைப்பும் அதன் பங்காளிகளும் வழங்கவிருக்கின்றன.

இன்னும் ஈராண்டில் சிங்கப்பூரில் உள்ள 10,000 மாணவர்கள், நிபுணர்களின் திறன்களை மேம்படுத்த Oracle விரும்புகிறது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்