சிங்கப்பூருக்குப் பிறந்தநாள் பரிசு கொடுக்க விரும்பும் மெக்ஸ் மேடர்
ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஆண்களுக்கான kitefoiling எனும் நீர்சாகச விளையாட்டில் பதக்கத்திற்காக சிங்கப்பூரின் மெக்சிமிலியன் மேடெர் (Maximilian Maeder) இன்று (9 ஆகஸ்ட்)போட்டியிடுகிறார்.
சிங்கப்பூருக்குப் பிறந்தநாள் பரிசாக அதனைப் பெற விரும்புவதாக அவர் கூறினார்.
"போட்டி இன்றுதான் நடைபெறவேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. அப்படி நடக்கும் என்றே நான் எண்ணியிருந்தேன். சிங்கப்பூருக்கு அழகிய பிறந்தநாள் பரிசு கொடுக்கமுடியுமா என்று பார்ப்போம்," என்று மேடெர் நிருபர்களிடம் கூறினார்.
kitefoiling போட்டியின் இறுதிச்சுற்று நேற்று (8 ஆகஸ்ட்) நடைபெறவிருந்தது.
வானிலை சரியில்லாததால் அது ஒத்திவைக்கப்பட்டது.
சமூக ஊடகத்தில் தமக்கு வரும் ஆதரவைப் பார்த்து மனம் நெகிழ்ந்ததாகச் சொன்னார் மேடர்.