Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

குழந்தைப் பிறப்பு விகிதம் சென்ற ஆண்டு சற்றே அதிகரித்தது

வாசிப்புநேரம் -

சென்ற ஆண்டு குழந்தைப் பிறப்பு விகிதம் 2020ஆம் ஆண்டைக் காட்டிலும் சற்று அதிகரித்திருந்தது.

  • 2020: 1.10
  • 2021: 1.12

கடந்த பல ஆண்டுகளாகவே சிங்கப்பூரில் குழந்தைப் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

திருமணமாகாதோரின் எண்ணிக்கை அதிகரிப்பு, திருமணங்களைத் தள்ளிப்போடுவது, திருமணமான தம்பதிகள் குறைவான பிள்ளைகள் பெற்றுக்கொள்வது ஆகியவை அதற்குக் காரணம்.

சென்ற ஆண்டு 31,713 குடிமக்கள் பிள்ளைகள் பிறந்தன.

2020இல் அந்த எண்ணிக்கை 31,816ஆக இருந்தது.

சென்ற 5 ஆண்டுகளில் (2017 - 2021) ஆண்டுக்குச் சராசரியாக சுமார் 32,300 குடிமக்கள் பிள்ளைகள் பிறந்தன.

அதற்கும் முந்தைய 5 ஆண்டுகளை (2012 - 2016) காட்டிலும் அது குறைவு.

2012 - 2016: ஆண்டுக்குச் சராசரியாக 32,900 பிள்ளைகள் பிறந்தன.

2020ஆம் ஆண்டு கிருமித்தொற்றால் திருமணங்கள் தாமதமானதும், பிள்ளை பெற்றுக்கொள்ளும் திட்டங்கள் தள்ளி வைக்கப்பட்டதும் அதற்குக் காரணம்.

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்