சிங்கப்பூர் வழி பிரிட்டனுக்குச் செல்லவிருந்த 500 கிலோ கஞ்சா
(படம்: HOIO, UK Border Force and WM ROCU)
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரும் பிரிட்டனும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், அனைத்துலகப் போதைப்பொருள் கும்பல் ஒன்று பிடிபட்டுள்ளது.
போதைப் பொருள், ஒழிப்புப் பிரிவும் பிரிட்டன் அதிகாரிகளும் இணைந்து நடவடிக்கையை மேற்கொண்டனர்.
நேரத்தோடு தகவல் பரிமாறிக்கொண்டதும் நெருங்கிய ஒத்துழைப்பும் அதற்கு உதவின.
ஜனவரி 3ஆம் தேதி பாசிர் பஞ்சாங் சோதனைத் தளத்தில் 509 கிலோ கஞ்சா கொண்ட கொள்கலன் 20 அடி உயர லாரியில் கண்டறியப்பட்டது.
அது சிங்கப்பூர் வழியாக பிரிட்டனுக்கு அனுப்பப்படவிருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.
தகவல் பரிமாற்றம் மூலம் பிப்ரவரி 25ஆம் தேதி பிரிட்டிஷ் அதிகாரிகள் 412 கிலோ கஞ்சா கொண்ட இன்னொரு கொள்கலனைக் கண்டுபிடித்தனர்.
அதுவும் பிரிட்டனுக்குச் செல்லவிருந்தது.
இரு நாடுகளும் இணைந்து கும்பலைக் கண்டறிந்து அதன் செயல்முறையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தன.
இந்த நடவடிக்கையால் பெரிய அளவில் போதைப்பொருள் விநியோகம் தடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.