சிங்கப்பூர் - புருணை இருதரப்புத் தற்காப்பு உறவுகள் மறுவுறுதி
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரும் புருணையும் இருதரப்புத் தற்காப்பு உறவுகளை மறுவுறுதிப்படுத்திக்கொண்டுள்ளன.
11ஆவது முறையாக நடைபெறும் இருநாட்டுத் தற்காப்புக் கொள்கைக் கருத்தரங்கில் அது பற்றி விரிவாகப் பேசப்பட்டது.
சிங்கப்பூர், புருணை தற்காப்பு அமைச்சுகளின் உயர் அதிகாரிகள் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.
இருநாட்டுத் தற்காப்பு அமைப்புகளுக்கு இடையிலான கூட்டு முயற்சிகள் கண்டுள்ள நல்ல முன்னேற்றத்தை அதிகாரிகள் சுட்டினர்.
இருதரப்புக்கும் பொதுவான அம்சங்களில் தற்காப்பு ஒத்துழைப்பைத் தொடர்வதற்கான கடப்பாட்டையும் அவர்கள் மறுவுறுதிப்படுத்தினர்.
சிங்கப்பூரும் புருணையும் தற்காப்பு உறவுகளை 50 ஆண்டுக்கு முன் அமைத்துக்கொண்டன.