Skip to main content
சிங்கப்பூர் நிறுவனங்களின் AI உருமாற்றத்துக்குக் கூடுதல் உதவி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூர் நிறுவனங்களின் AI உருமாற்றத்துக்குக் கூடுதல் உதவி

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் நிறுவனங்களின் செயற்கை நுண்ணறிவு உருமாற்றத்துக்குக் கூடுதல் ஆதரவு கிடைக்கவிருக்கிறது.

நிறுவனங்களுக்கான கணினி இயக்கத் திட்டத்தின்கீழ் புதிய Google Cloud சேமிப்பகச் சேவை அதற்கு வழியமைக்கும்.

அதன் மூலம் நிறுவனங்கள் அவற்றின் செயற்கை நுண்ணறிவு நிபுணத்துவத்தை ஒருங்கிணைத்து, Googleஇன் கட்டமைப்புகளைப் பயன்படுத்த முடியும்.

அறிவார்ந்த தொழில்நுட்பத்தின்வழி நிறுவனங்களைக் கைதூக்கி விடுவது திட்டத்தின் நோக்கம் என்று வர்த்தக, தொழில் மூத்த துணையமைச்சர் லோ யென் லிங் கூறினார்.

AI Cloud Takeoff திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு பேசினார்.

Cloud சேமிப்பகச் சேவை வழங்குநர்களையும், தொழில்நுட்ப நிபுணர்களையும் நிறுவனங்களோடு இணைக்கும் தொடரின் முதல் நிகழ்ச்சியாக அது இடம்பெற்றது.

30 நிறுவனங்கள் முன்னோடித் திட்டத்தில் பங்கேற்றன.

அடுத்த ஓராண்டில் 300 நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு நிலையங்கள் அமைக்கப்படும்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்