சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
சமயத் தலைவரை மட்டுமல்ல; ஒரு சிறந்த மனிதகுலத் தலைவரையும் இழந்துவிட்டோம்: போப் பிரான்சிஸின் மறைவு - மனந்திறந்த சிங்கப்பூர்க் கத்தோலிக்கர்கள்
வாசிப்புநேரம் -

(படம்:Filippo MONTEFORTE / AFP))
போப் பிரான்சிஸின் மறைவு பலரைத் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. சிங்கப்பூர்க் கத்தோலிக்கர்கள் பலரை அது பெருமளவில் பாதித்துள்ளது.
சிலர் மனந்திறந்து தங்களது கருத்துகளைச் 'செய்தி'யிடம் பகிர்ந்துகொண்டனர்.
"சென்ற ஆண்டு போப் பிரான்சிஸ் சிங்கப்பூரில் நடத்திய கூட்டுப் பிரார்த்தனைக்குச் சென்றிருந்தேன். அவரை நேரில் பார்த்த அனுபவம் உன்னதமாக இருந்தது. போப் என்றாலே அன்பின் உருவம். அவரது மறைவு உலகிற்குப் பேரிழப்பு"
- ஜோ
"மாறிவரும் உலகில் போப் பிரான்சிஸ் கருணை, அடக்கம், பணிவு ஆகியவற்றிற்குப் பெயர்போனவர். மக்களிடையே இருக்கும் வேறுபாடுகளைக் குறைத்து ஏழை எளியோரின் உரிமைக்காகப் போராடியவர். அவர் பலரது உள்ளங்களில் எப்போதும் குடியிருப்பார்"
- பெட்ரீனா
"2024இல் போப் பிரான்சிஸின் கூட்டுப் பிரார்த்தனையில் கலந்துகொண்டேன். அதில் பங்கெடுத்தபோது வருணிக்க இயலாத அளவிற்கு இன்பம் கிடைத்தது. அவர் மறைந்த செய்தியை இன்று கேட்டபோது தூக்கிவாரிப் போட்டது போல் உள்ளது"
- ஹெலீன்
"போப் பொறுப்பேற்றதிலிருந்து மாற்றத்தின் நட்சத்திரமாக விளங்கினார். நாம் இன்று சமயத் தலைவரை மட்டும் இழக்கவில்லை; ஒரு சிறந்த மனிதகுலத் தலைவரையும் இழந்துவிட்டோம்"
- சுகன்யா
"போப்பின் இறப்புச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவர் பல சர்ச்சைக்குரிய விவகாரங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அவர் சமுதாயத்தில் அவதியுறும் பலருக்குக் குரல் கொடுத்து அவர்களைக் கைதூக்கிவிட்டார்."
-ஃபோஸ்தீனா
இப்படிப் பலர் தங்களது வருத்தத்தைத் தெரிவித்து வருகின்றனர். போப் மறைந்தாலும் அவர் ஏற்படுத்திய தாக்கம் என்றும் நிலைத்து நிற்கும்.

ஆதாரம் : Mediacorp Seithi