Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கே மிதவைகளின் சாயலில் அலங்கரிக்கப்படும் 20 பேருந்துகள்

வாசிப்புநேரம் -
சிங்கே மிதவைகளின் சாயலில் அலங்கரிக்கப்படும் 20 பேருந்துகள்

படம்: Facebook/Land Transport Authority – We Keep Your World Moving

சிங்கே ஊர்வலத்தின் 50ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக 20 பேருந்துகள் சிங்கே மிதவைகளின் சாயலில் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

அவற்றை இன்று தொடங்கி 2 மாதங்களுக்குப் பொதுமக்கள் சாலைகளில் காணலாம்.

இந்தியக் கலாசாரத்தைத் தழுவி வெள்ளை ரதத்தின் வடிவமைப்பைக் கொண்ட சிங்கே மிதவை 2018ஆம் ஆண்டு ஊர்வலத்தில் இடம்பெற்றிருந்தது.

1994ஆம் ஆண்டு வலம் வந்த Jumbo யானை, சர்க்கஸ் கோமாளிகள் மிதவை போன்றும் பேருந்து ஒன்று அலங்கரிக்கப்பட்டுள்ளது.

சிங்கே ஊர்வலத்தின் 50 ஆண்டு வரலாற்றை அங்கீகரிக்கும் வகையில் ஒரு பேருந்தில் கடந்தகாலப் படங்களைக் கொண்டுள்ளது ஒரு சிறப்புப் பேருந்து.

மொத்தம் 14 வடிவமைப்புகளைக் கொண்ட பேருந்துகளை கேலாங் சிராய் (Geylang Serai), லிட்டில் இந்தியா (Little India), சைனாடவுன் (Chinatown) உள்ளிட்ட வட்டாரங்களில் பொதுமக்கள் இனி காணலாம்.

வெளிப்புறங்கள் மட்டுமல்லாமல் உள்ளேயும் சிங்கே 50ஆம் ஆண்டுச் சிறப்பம்சங்கள் இருக்கின்றன.

சிங்கே ஊர்வலம் குறித்த சிறப்புக் குறிப்புகளைப் பயணிகள் அறிந்துகொள்ளலாம்.

QR குறியீடுகளைப் பயன்படுத்திக் காணொளிகளைக் காணலாம், Instagram 'filter' அம்சங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பேருந்துகளின் அறிமுக நிகழ்ச்சியில் கலசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் தோங் கலந்துகொண்டார்.

இதுபோன்ற நடவடிக்கைகளின்மூலம் பயணிகள் சிங்கே ஊர்வலம் பற்றிய சிறப்பம்சங்களைத் தெரிந்துகொள்ளலாம் என்று அவர் சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa