Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

"போப் பிரான்சிஸ் அன்பு மொழிக்குச் சொந்தக்காரர்; எளிமையின் இலக்கணம்" - சிங்கப்பூர் பாதிரியார்கள் புகழஞ்சலி

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உலகம் முழுவதும் கத்தோலிக்கர்கள் போப் பிரான்சிஸின் நினைவில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சிறப்புப் பிரார்த்தனைகளும் நடைபெறுகின்றன.

போப்பின் நற்குணங்களைப் பாராட்டி அவருக்கு சிங்கப்பூரின் Cathedral of the Good Shepherd தேவாலயத்தின் பாதிரியார் சேவியர் நத்தானியல் (Xavier Nathanial) புகழஞ்சலி செலுத்தினார்.
 
Related article image
12 ஆண்டுகள் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகப் பொறுப்பேற்றுச் சிறப்பாக வழிநடத்திய பெருமை போப் பிரான்சிஸுக்கு இருப்பதாக அவர் சொன்னார்.
 
"எங்கு சென்றாலும் அன்பு மொழி பேசும் குணம் கொண்டவர்"
என்று பாதிரியார் நத்தானியல் போப் பிரான்சிஸை வருணித்தார்.

குழந்தைகள் மீது அதிக பாசமும் இளையர்களை ஊக்குவித்து அவர்களுக்கு நல்வழிகாட்ட போப் பிரான்சிஸ் நிறைய பங்காற்றியிருப்பதாகவும் அவர் சொன்னார்.

இவ்வேளையில் போப் பிரான்சிஸின் மறைவு உலகக் கத்தோலிக்க மக்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியிருப்பதாக நொவீனா தேவாலயத்தின் பாதிரியார் ஆன்ட்டனி சார்ல்ஸ் (Anthony Charles) கூறினார்.
Related article image
"போப் பிரான்சிஸ் மிகவும் அன்பானவர். எளிமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். உலக அமைதிக்காகவும் மனித மாண்புக்காகவும் குரல் கொடுத்தவர். ஒற்றுமையை வலியுறுத்தியவர்"
எனப் பாதிரியார் சார்ல்ஸ் புகழஞ்சலி செலுத்தினார்.

போப் பிரான்சிஸ் கடந்த ஆண்டு சிங்கப்பூர் வந்தபோது அவரை நேரில் சந்தித்து ஆசிப் பெற்றது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் என்றார் அவர்.

நேற்று காலமான போப் பிரான்சிஸின் நல்லுடல் வத்திகனில் மரப் பேழையில் வைக்கப்பட்டிருக்கிறது.
 
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்