நிமிடத்திற்கு 100,000 லிட்டர் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் புதிய சாதனம்…

(படம்: CNA/Marcus Mark Ramos)
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை பெரிய அளவிலான எண்ணெய்த் தொட்டித் தீச்சம்பவங்களைக் கையாள்வதற்குப் புதிய சாதனம் ஒன்று கைகொடுக்கவிருக்கிறது.
100 மீட்டருக்கும் அதிகமான விட்டத்தைக் கொண்ட தீயைச் சமாளிக்கக்கூடிய ஆற்றல் பெற்றது அது.
பல அமைப்புகள் பங்கெடுக்கும் பயங்கரவாத எதிர்ப்பு பாவனைப் பயிற்சியில் அதையும் சேர்த்து சில கருவிகள் காட்சிக்கு வைக்கப்படும்.
பாவனைப் பயிற்சி வரும் புதன்கிழமை (22 மார்ச்) நடைபெறவுள்ளது.
ஜூரோங் தீவு, நாட்டின் எரிசக்தி, ரசாயனத் தொழில்துறையின் மையப் பகுதி.
அங்கு எண்ணெய்த் தொட்டியில் தீப்பற்றினால் நிலைமை மோசமாகிவிடலாம்.
அத்தகைய சூழல்களைத் துரிதமாகக் கையாள உதவவிருக்கிறது புதிய சாதனம்.
கடல் போன்ற பெரிய நீர்நிலையிலிருந்து அது பெரும் அளவிலான தண்ணீரை உள்ளிழுக்கும் ஆற்றல் கொண்டது.
நிமிடத்திற்கு 100,000 லிட்டர் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்க அதனால் இயலும்.
ஓர் ஒலிம்பிக் நீச்சல் குளத்தை அதனால் 25 நிமிடங்களுக்குள் நிரப்பிவிட முடியும்.
எதிர்வரும் Northstar பாவனைப் பயிற்சியில் ஓர் இயந்திர நாயும் காட்சிக்கு வரும்.
Rover-X எனும் இயந்திரம் தானாகவே நகர்ந்து காற்றில் உள்ள நச்சு வாயுக்களை அடையாளம் காணும்.
11ஆவது முறையாக நடத்தப்படும் பாவனைப் பயிற்சியில் காவல்துறை, சிங்கப்பூர் ஆயுதப் படை ஆகியவற்றின் அதிகாரிகளும் பங்குபெறுவர்.