Skip to main content
குளுகுளு வானிலை தொடரும்...
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

குளுகுளு வானிலை தொடரும்...

வாசிப்புநேரம் -
குளுகுளு வானிலை தொடரும்...

படம்: Envato

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் நேற்று (2 டிசம்பர்) காலை வானிலை குளுமையாக இருந்தது.

தீவின் பெரும்பாலான பகுதிகளில் தட்பநிலை சுமார் 25 டிகிரி செல்சியஸிற்கும் 23.5 டிகிரி செல்சியஸிற்கும் இடைப்பட்டிருந்தது.

சுட்டெரிக்கும் வெயிலுக்குப் பழகிப்போன சிங்கப்பூரர்கள் பலருக்கும் ஏதோ வெளிநாட்டில் வசிப்பதுபோல் இருந்திருக்கலாம்.

பலரும் குளிர்சட்டைகளுடன் காணப்பட்டனர்.

இன்று காலை பல பகுதிகளில் மீண்டும் சூரியன் தலைகாட்டுகிறது.

கவலை வேண்டாம்... சிங்கப்பூரில் குளுகுளு வானிலை தொடரும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இம்மாதத்தின் (டிசம்பர்) முதல் இரு வாரங்களில் பெரும்பாலான நாள்களில் மிதமான அல்லது கனத்த மழை பெய்யக்கூடும்.

பெரும்பாலான நாள்களில் தினசரி தட்பவெப்ப நிலை 24 டிகிரி செல்சியஸிற்கும் 33 டிகிரி செல்சியஸிற்கும் இடைப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்