Skip to main content
சிங்கப்பூர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூர் - ஆசியான் - சீனா: மோசடிகளை முறியடிக்கக் கடப்பாடு

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் - ஆசியான் - சீனா: மோசடிகளை முறியடிக்கக் கடப்பாடு

(காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: CNA)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூர், ஆசியானோடும் சீனா போன்ற பங்காளி நாடுகளோடும் இணைந்து மோசடிகளை முறியடிக்கக் கடப்பாடு கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய குற்றங்களைத் தடுக்க அனைத்துலக ஒத்துழைப்பு அவசியம் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் தியோ (Josephine Teo) கூறினார்.

தென்கிழக்காசிய நாடுகள் மோசடிகளை எதிர்க்கும் பொறுப்பைத் தங்கள் தோள்களில் சுமக்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi) சொன்னதாகக் கூறப்பட்டது.

அதைத் தொடர்ந்து திருமதி தியோவின் கருத்துகள் வந்துள்ளன.

குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு நாடும் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்; மோசடிகளை எதிர்க்கும் வழிமுறைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார்.

பேங்காக்கில் நடைபெற்ற ஐந்தாவது ஆசியான் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர்கள் சந்திப்பில் அமைச்சர் தியோ பேசினார்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்