சிங்கப்பூர் நிறுவனங்கள் மெக்சிகோவில் தடம்பதிக்கக் கூடுதல் வாய்ப்புகள்
வாசிப்புநேரம் -
படம்: envato
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர் நிறுவனங்கள் மெக்சிகோவில் தடம்பதிக்கவும் அங்குள்ள நிறுவனங்களுடன் சேர்ந்து பணியாற்றவும் கூடுதல் வாய்ப்புகளைப் பெறவிருக்கின்றன.
சிங்கப்பூர் வணிகச் சம்மேளனமும் COMCE எனும் மெக்சிகோவின் வணிக அமைப்பும் அதற்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
புத்தாக்கத் தொழில்நுட்பத்துடன் கூடிய உற்பத்தி, வேளாண் பொருள்கள், நிதித் தொழில்நுட்பத் தீர்வுகள் உள்ளிட்ட துறைகளில் கூடுதல் வணிக வாய்ப்புகள் ஆராயப்படுகின்றன.
இருதரப்பு வணிகங்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்க அமைப்புகள் கொண்டிருக்கும் கடப்பாட்டை ஒப்பந்தம் எடுத்துக்கூறுகிறது.
அதிபர் தர்மன் சண்முகரத்னம் மெக்சிகோ-சிங்கப்பூர் வணிகக் கருத்தரங்கில் கலந்துகொண்டு அதுகுறித்துப் பேசினார்.
அனைத்துலக அளவில் நிலவும் நிச்சயமற்ற பொருளாதாரச் சூழலில் தொடர்புகளை விரிவுபடுத்துவது மிக முக்கியமாகிவிட்டதாக அவர் சொன்னார்.

ஆதாரம் : CNA