சவுதி அரேபியாவில் நடந்த தாக்குதல்களுக்கு சிங்கப்பூர் கண்டனம்
படம்: AFP
நேற்று (25 மார்ச்) சவுதி அரேபியாவின் பல்வேறு இடங்களில் நடந்த தாக்குதல்களுக்கு சிங்கப்பூர் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜெட்டாவில் உள்ள Aramcoவின் எண்ணெய்ச் சேமிப்பு இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.
அத்தகைய தாக்குதல்கள் சகித்துக்கொள்ள முடியாதவை என்றும் நியாயப்படுத்த முடியாதவை என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
தாக்குதல்களில் சிங்கப்பூரர்கள் பாதிக்கப்பட்டதாக இதுவரை தகவல் இல்லை என்று அமைச்சு கூறியது.
சவுதி அரேபியாவில் உள்ள சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும் உள்ளூர்ச் செய்திகளை கவனமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
அவர்கள் தங்கள் தனிப்பட்ட பாதுகாப்புக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று அமைச்சு கூறியது.
சவுதி அரேபியாவில் இருக்கும் சிங்கப்பூரர்களும் அங்கு செல்லவிருக்கும் சிங்கப்பூரர்களும் வெளியுறவு அமைச்சிடம் பதிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தூதரக உதவி தேவைப்படும் சிங்கப்பூரர்கள் ரியாத்தில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகம், ஜெட்டாவில் உள்ள சிங்கப்பூர்த் துணைத் தூதரகம், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு அலுவலகம் ஆகியவற்றைத் தொடர்புகொள்ளலாம்.
ரியாத்தில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகம்:
எண்: +966-11-480-3855
அவசர உதவி எண் (after hours): +966-50019-1220
மின்னஞ்சல் முகவரி: Singemb_ruh [at] mfa.sg
ஜெட்டாவில் உள்ள சிங்கப்பூர்த் துணைத் தூதரகம்:
எண்: +966-12-607-3980/3981
அவசர உதவி எண் (after hours): +966-50-559-6481
மின்னஞ்சல் முகவரி: Singcg_JED [at] mfa.sg
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு அலுவலகம் (24 மணி நேரம்):
எண்: +65 6379 8800/8855
மின்னஞ்சல் முகவரி: mfa_duty_officer [at] mfa.gov.sg