வெனிசுவேலா நிலநடுக்கம் - $64,700 வழங்கும் சிங்கப்பூர்
வாசிப்புநேரம் -
படம்: Facebook/Vivian Balakrishnan
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர் அரசாங்கம், வெனிசுவேலாவின் நிலநடுக்க நிவாரண முயற்சிகளுக்கு 50,000 டாலரை (சுமார் 64,700 வெள்ளி) வழங்கியிருக்கிறது.
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் அதனைத் தமது Facebook பக்கத்தில் தெரிவித்தார்.
அந்தத் தொகை, வெனிசுவேலா மீட்பு, மறுநிர்மாண நிதிக்குப் பயன்படும் என்றார் அவர்.
சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம் 100,000 வெள்ளியை வழங்கியிருப்பதாகவும் அவர் சொன்னார்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவச் சங்கம் பொது நிதிதிரட்டு முயற்சிகளைத் தொடங்கியிருப்பதாக டாக்டர் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
பேரிடர்களின்போது அனைத்துலகச் சமூகத்தின் ஆதரவும் ஒற்றுமையும் முக்கியம் என்றார் அமைச்சர்.
வெனிசுவேலா மக்களின் மனவுறுதியும் ஒற்றுமையும் இக்கட்டான காலகட்டத்தைக் கடக்க உதவும் என்று அமைச்சர் பாலகிருஷ்ணன் சொன்னார்.

ஆதாரம் : Mediacorp Seithi