சரக்குக் கப்பல் மூழ்கியது...18 வியட்நாமிய சிப்பந்திகளைக் காப்பாற்ற உதவிய சிங்கப்பூர்
வாசிப்புநேரம் -
சிங்கப்பூர், இன்று காலை மூழ்கிய சரக்குக் கப்பலில் இருந்த 18 வியட்நாமிய சிப்பந்திகளைக் காப்பாற்ற உதவியிருக்கிறது.
வியட்நாமில் பதிவு செய்யப்பட்ட DOLPHIN 18 என்ற அந்த கப்பலின் உதவிக் கோரிக்கை MRCC எனப்படும் சிங்கப்பூரின் கடல்துறை மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்குக் கிடைத்தது.
சிங்கப்பூரின் தேடல், மீட்பு வட்டாரத்துக்குள் கப்பல் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
MRCC தேடல் பணியை ஒருங்கிணைத்து, சிப்பந்திகளைக் காப்பாற்றியது.
ஹாங்காங் கப்பல் அவர்களை அவசர உதவிப் படகுகளிலிருந்து மீட்டது.
அனைவரின் உடல்நிலையும் சீராய் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மலேசியாவின் தஞ்சோங் பெலப்பாஸ் (Tanjung Pelepas) துறைமுகத்தில் இறங்குவர்.

ஆதாரம் : Others