Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"நிரந்தர நோய் என்பதால் ஆபத்து குறைவு என்று நினைக்கக்கூடாது!" - பல சிங்கப்பூர்க் குடியிருப்பாளர்கள் COVID-19இன் ஆபத்தைப் பொருட்படுத்தவில்லை: கருத்தாய்வு

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்க் குடியிருப்பாளர்கள் கோவிட்-19 நோய்த்தொற்றின் ஆபத்துகளை அலட்சியப்படுத்தும் போக்கு அதிகரிக்கிறது என்று கருத்தாய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

Moderna Biotech Singapore, Asia Pacific Immunization Coalition (APIC) எனும் ஆசிய பசிபிக் தடுப்பூசிச் சம்மேளனம் ஆகியவை நடத்திய கருத்தாய்வில் 1,219 பேர் கலந்துகொண்டனர்.

அவர்களில்...
  • COVID-19 உடல்நலத்துக்குப் பெரிய ஆபத்தை விளைவிக்காது என்று எண்ணுவோர்: 87%
  • எதிர்காலத்தில் கூடுதல் தடுப்பூசி எடுக்கத் திட்டமிடாதவர்கள்: 35%
  • கூடுதல் தடுப்பூசிக்கான தேவையை விளக்கப் போதிய தகவல் இல்லை என்று எண்ணுவோர்: 62%

COVID-19 நோய்க்கு எதிரான கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என்று எண்ணுவோரின் எண்ணிக்கையும் போக்கும் கவலை தருவதாகச் சில மருத்துவர்கள் CNA செய்தியிடம் கூறியுள்ளனர்.

உலகெங்கும் பிரச்சினையளிக்கும் நோய்க்கு எதிராகப் பாதுகாப்பு பெறவேண்டும் என்கிறார் டாக்டர் ஓங் கியான் சுங் (Dr Ong Kian Chung). அவர் சிங்கப்பூரின் Chronic Obstructive Pulmoray Disease Association எனும் இதய நோய்ச் சங்கத்தின் தலைவர்.

பொதுமக்கள் COVID-19 தடுப்புமருந்து குறித்துக் கிடைக்கும் தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்வது முக்கியம் என்று ஆசிய பசிபிக் தடுப்பூசிச் சம்மேளனத்தின் துணைத் தலைவர் டிக்கி பாங்கெட்ஸு (Tikki Pangetsu) குறிப்பிட்டார்.

நிரந்தர நோய் என்று வகைப்படுத்தப்பட்டிருப்பதால் அதில் ஆபத்து குறைவு என நினைக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்