Skip to main content
$390,000 தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

$390,000 தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல் - மூவர் கைது

வாசிப்புநேரம் -
$390,000 தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல் - மூவர் கைது

படம்: Singapore Customs

சிங்கப்பூர்ச் சுங்கத்துறை தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் அடங்கிய 3,600 பொட்டலங்களைப் பறிமுதல் செய்துள்ளது.

3 நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் இருவர் மலேசியர்கள். மற்றொருவர் சிங்கப்பூரர்.

இம்மாதம் (மார்ச் 2025) 1ஆம் தேதி அப்பர் சிராங்கூன் ரோடு (Upper Serangoon Road) செகார் ரோடு (Segar Road) பகுதிகளில்
மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளின்போது இரு வேன்களும் பிடிபட்டன.

தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளின் விற்பனையின் மூலம் கிடைத்ததாகச் சந்தேகிக்கப்படும் 19,000 வெள்ளி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதலான சிகரெட்டுகளுக்குச் செலுத்தப்படாத தீர்வை, பொருள் சேவை வரி ஆகியவற்றின் மதிப்பு சுமார் 390,000 வெள்ளி என்று கூறப்பட்டது.

ஆரம்பக்கட்ட விசாரணைகளில், கைதான மலேசியர்கள் இருவரும் சமூக ஊடகங்கள் வழியாகத் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளை விநியோகிக்கும் வேலை இருப்பதைத் தெரிந்துகொண்டதாகச் சொல்லப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட சிங்கப்பூரரின் உத்தரவுகளின்படி அவர்கள் இயங்கியதாகக் கூறப்பட்டது.

விசாரணை தொடர்கிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 6 ஆண்டுச் சிறைத்தண்டனை, அல்லது செலுத்தத் தவறிய தீர்வை, பொருள் சேவை வரியைப் போன்று 40 மடங்கு தொகை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஆதாரம் : Others/Singapore Customs

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்