பொட்டலம், தங்கக் கட்டி மோசடி - சுங்கச் சாவடி ஆணையம் எச்சரிக்கை
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர் சுங்கச் சாவடி ஆணையம் பொட்டலங்கள் தொடர்பான மோசடிகள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொட்டலத்தைச் சோதிக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்டோர் Gmail மின்னஞ்சலைப் பெற்றனர்.
பின்னர் மோசடிக்காரர்கள் சோதனை செய்வதற்குக் கட்டணம் கேட்டனர்.
மூத்த அதிகாரிகளின் பெயரைப் பயன்படுத்தி போலி ஆவணங்களைக் காட்டி மலேசிய வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பும்படி அவர்கள் கோரினர்.
மற்றொரு மோசடியில், பாதிக்கப்பட்டவரின் பெயரில் அனுப்பப்பட்ட தங்கக் கட்டிகளை ஆணையம் பிடித்து வைத்திருப்பதாகவும் விடுவிக்கப் பணம் செலுத்தும்படியும் WhatsApp-இல் கேட்கப்படுகிறது.
அத்தகைய மோசடிகள் குறித்துக் கவனமாய் இருக்கும்படி ஆணையம் மக்களை அறிவுறுத்தியது.
ஆணையம் ஒருபோதும் கட்டணம் செலுத்தச் சொல்லாது என்று அது வலியுறுத்தியது.
ஆணையத்தின் அதிகாரத்துவ மின்னஞ்சல்கள் "@customs.gov.sg" என்ற முகவரியிலிருந்து மட்டுமே வரும் என்றும் அது சொன்னது.
சந்தேகத்துக்குரிய செய்திகளை உடனே காவல்துறையிடம் புகார் செய்யும்படி அது கேட்டுக்கொண்டது.