Skip to main content
சிங்கப்பூரில் டெங்கித் தடுப்பு மருந்து?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் டெங்கித் தடுப்பு மருந்து?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் தற்போது உரிமம்பெற்ற ஒரே டெங்கித் தடுப்பு மருந்து Dengvaxia என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ கங் (Ong Ye Kung) தெரிவித்துள்ளார்.

உலக அளவில் தேவை குறைவாக இருப்பதால் Dengvaxia தடுப்பு மருந்தின் தயாரிப்பை அதன் விநியோகிப்பாளர் நிறுத்துவதாக அவர் கூறினார்.

Dengvaxia தடுப்பு மருந்தை 3 முறை போட்டுக்கொள்ள வேண்டும்.

சிங்கப்பூரில் ஏற்கனவே அதைப் போடத் தொடங்கியோருக்கு மட்டுமே அது வழங்கப்படுவதாகத் திரு ஓங் குறிப்பிட்டார்.

மற்ற நாடுகளில் Qdenga, Butantan-Dengue எனும் இரு டெங்கித் தடுப்பு மருந்துகள் மக்களுக்குப் போடப்படுகின்றன.

ஆனால் அவற்றின் பயன்பாட்டுக்குச் சிங்கப்பூர் அனுமதி வழங்கவில்லை.

MSD நிறுவனத்தால் தயாரிக்கப்படும் V181 எனும் டெங்கித் தடுப்பு மருந்து 3ஆம் கட்டச் சோதனையில் இருப்பதாக அமைச்சர் ஓங் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சும் சம்பந்தப்பட்ட அமைப்புகளும் நிலைமையைத் தொடர்ந்து கண்காணிக்கும் என்று அவர் சொன்னார்.

டெங்கித் தடுப்பு மருந்து குறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குத் திரு ஓங் எழுத்துபூர்வப் பதிலளித்தார்.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்