'சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் கட்டங்கட்டமாகத் தளர்த்தப்படும் நிலையில், பயனீட்டாளர்கள் இவ்வாண்டு மேலும் அதிகமாகச் செலவு செய்யலாம்'

(படம்: Gaya Chandramohan/CNA)
சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் கட்டங்கட்டமாகத் தளர்த்தப்படும் வேளையில், பயனீட்டாளர்கள் இவ்வாண்டு மேலும் அதிகமாகச் செலவு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர்ப் பயனீட்டாளர் செலவினம் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.
உள்ளூர் பயனீட்டாளர் செலவினம்
- 2016 - $134.4 பில்லியன்
- 2017- $139.3 பில்லியன்
- 2018- $146.3 பில்லியன்
- 2019- $151.8 பில்லியன்
- 2020- $147.1 பில்லியன்
SingapoRediscovers பற்றுச்சீட்டுத் திட்டம்வழி, கடந்த மாத முதல்தேதி நிலவரப்படி, உள்ளூர்வாசிகள் சுமார் 280 மில்லியன் வெள்ளி செலவு செய்துள்ளனர்.
சிங்கப்பூரர்கள், பயணத்துறையோடு அது சார்ந்த வர்த்தகங்களுக்கும் ஆதரவளித்துள்ளனர்.
இருப்பினும், அது அனைத்துலகப் பயணத்துறையில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டப் போதுமானதாக இருக்காது என்று திரு. கான் குறிப்பிட்டார்.
பயணத்துறையில் செலவினம்
- 2019 - $28 பில்லியன்
- 2020 - $5 பில்லியன்
உலக அளவில் பல்வேறு நாடுகளின் எல்லைக் கட்டுப்பாடுகளால் அந்தத் தொகை கடந்த ஆண்டு மேலும் குறைந்திருக்கும் என்று திரு. கான் கூறினார்.
இவ்வாண்டு வருகையாளர்களின் எண்ணிக்கையில் மெதுவான வளர்ச்சியே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், உணவு-பானம் போன்ற பயனீட்டாளர்களைச் சார்ந்த துறைகளில் இவ்வாண்டு இறுதிக்குள் வழக்கநிலை திரும்பிவிடும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது என கூறப்பட்டது.