Skip to main content
சிங்கப்பூரில் மின்சாரத் தேவை எப்படி நிறைவு செய்யப்படுகிறது?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் மின்சாரத் தேவை எப்படி நிறைவு செய்யப்படுகிறது?

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் மின்சாரத் தேவை எப்படி நிறைவு செய்யப்படுகிறது?

(கோப்புப் படம்: TODAY/Ili Nadhirah Mansor)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூருக்கான எரிவாயு ஏற்றுமதியை இந்தோனேசியா அண்மையில் குறைத்திருக்கிறது.

மின்சாரத்திற்காகச் சிங்கப்பூர் பிற நாடுகளை எந்த அளவுக்குச் சார்ந்திருக்கிறது?

சிங்கப்பூரின் சுமார் 95 விழுக்காட்டு மின்சாரம் இயற்கை எரிவாயுவிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

இந்தோனேசியா, மலேசியா முதலிய நாடுகளிலிருந்து எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது.

அதைக் கொண்டு இங்குள்ள நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

அது சிங்கப்பூரின் தேவையைக் கிட்டத்தட்ட முழுமையாக நிறைவு செய்யும்.

ஆனால் எரிபொருளுக்குப் பதிலாக நேரடியாக மின்சாரத்தையே இறக்குமதி செய்யும் பணியைச்
சிங்கப்பூர் தொடங்கிவிட்டது.

லாவோசில் (Laos) நீர்மின்சக்தி மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் தாய்லந்து, மலேசியா வழியாகச் சிங்கப்பூருக்கு வருகிறது.

எதிர்காலத்தில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உற்பத்தியாகும் மின்சாரமும் சிங்கப்பூருக்கு வரக்கூடும்.

2035ஆம் ஆண்டுக்குள் சுமார் ஆறு கிகாவாட் அளவு குறைந்த கரிம வெளியேற்றத்தைக் கொண்ட மின்சாரத்தை இறக்குமதி செய்வது சிங்கப்பூரின் இலக்கு.

அப்போது தேவைப்படக்கூடிய மின்சாரத்தில் அது சுமார் 30 விழுக்காடு.

ஆனால் நாடுகளுக்கு இடையே மின்சாரத்தைக் கொண்டுசெல்வது தொடர்பில் ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறு விதிமுறைகளும் முன்னுரிமைகளும் உள்ளன.

அவற்றில் இணக்கம் காணாவிட்டால் சில மின்சார இணைப்புத் திட்டங்கள் நிறைவேறாமல் போகலாம்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்