சிங்கப்பூரில் இவ்வாண்டுக்குப் போதுமான திரவ இயற்கை எரிவாயு உள்ளது
வாசிப்புநேரம் -
(படம்: REUTERS/Dado Ruvic)
சிங்கப்பூருக்கு இவ்வாண்டுக்குத் தேவையான திரவ இயற்கை எரிவாயு இருப்பதாக சிங்கப்பூர் எரிசக்திச் சந்தை ஆணையம் தெரிவித்திருக்கிறது.
ஆணையத்தின் தலைமை நிர்வாகி புவா கொக் கியோங் (Puah Kok Keong) ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்குத் தந்த பேட்டியில் அந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
கத்தாரிடம் இருந்து வந்திருக்க வேண்டிய இயற்கை எரிவாயுவை மற்ற இடங்களில் இருந்து சிங்கப்பூர் பெற முடிந்ததாகத் திரு புவா குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகள் ஆகியவற்றிடம் இருந்து சிங்கப்பூர் தேவையான எரிவாயுவைப் பெற்றுள்ளது.
ஈரான் போர் காரணமாக கத்தாரில் இருந்து இயற்கை எரிவாயு வருவது தடைப்பட்டது.
வரும் மாதங்களில் கத்தார் விநியோகத் தடை நீங்கினால், மற்ற இடங்களிலிருந்து பெறப்பட்ட இயற்கை எரிவாயு மறுவிற்பனை செய்யப்படலாம் என்று திரு புவா சொன்னார்.
சிங்கப்பூர் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தும் இயற்கை எரிவாயுவில் 10 விழுக்காடு கத்தாரிலிருந்து வருகிறது.

ஆதாரம் : Reuters