Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தென்கிழக்காசியாவில் முதல் அனைத்துலக வெப்பச் சுகாதாரத் தகவல் கட்டமைப்பு நடுவம் - சிங்கப்பூரில்..

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் அனைத்துலக வெப்பச் சுகாதாரத் தகவல் கட்டமைப்பு நடுவம் உருவாக்கப்படவிருக்கிறது.

தென்கிழக்காசியாவில் அத்தகைய நடுவம் அமைக்கப்படுவது இது முதன்முறை.

சிங்கப்பூர் ஆய்வாளர்கள் வெப்பத்தைச் சமாளிப்பதற்கான ஆய்வுகளை நடுவத்தில் மேற்கொள்வதோடு அதற்கான கொள்கைகளையும் வகுக்க உதவுவர்.

அனைத்துலக வெப்பச் சுகாதாரத் தகவல் கட்டமைப்பின் முதல் தென்கிழக்காசியக் கருத்தரங்கில் நடுவம் அறிமுகம் செய்யப்பட்டது.

தேசியப் பல்கலைக்கழகத்தின் Heat Resilience and Performance நிலையத்தில் புதிய நடுவம் அமைக்கப்படும்.

நடுவத்தில் வெப்பத்தை ஆராயும் பிரிவும் பருவநிலையைப் பிரதிபலிக்கும் பாவனை வசதியும் இருக்கும்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்