Skip to main content
ஆண்டுக்கு 800,000 டன் உணவு வீசப்படுகிறது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஆண்டுக்கு 800,000 டன் உணவு வீசப்படுகிறது - தீர்வு?

வாசிப்புநேரம் -
ஆண்டுக்கு 800,000 டன் உணவு வீசப்படுகிறது - தீர்வு?

படம்: Envato Elements

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் தேவையில்லாத உணவை விநியோகிப்பது தொடர்பில் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் கூறியுள்ளனர்.

காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் விநியோகத் தொடரை நிர்வகிப்பதற்கும் அதுபோன்ற முறை தேவை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

சிங்கப்பூரர்கள் கட்டுப்படியான உணவைப் பெற அது உதவும் என்று அவர்கள் கூறினர்.

அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அரசாங்க நாடாளுமன்ற குழுவைச் சேர்ந்தவர்கள்.

உணவுக் கழிவு பற்றிய புள்ளிவிவரங்களைப் பெற நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் கோரிக்கை தாக்கல் செய்யப்படும்.

உணவு வீணாவதைத் தடுக்கும் குழுக்கள், அறநிறுவனங்கள் போன்றவற்றின் மூலம் கழிவைக் குறைக்கும் வழிகளை அடையாளம் காண அது உதவும்.

பொதுமக்களிடையே கூடுதல் விழிப்புணர்வு இருக்கலாம் என்று அரசாங்க நாடாளுமன்றக் குழுவின் தலைவர் பொ லி சான் கூறினார்.

சிங்கப்பூர் அதன் உணவில் 90 விழுக்காட்டை இறக்குமதி செய்கிறது.

ஆண்டுக்குச் சுமார் 800,000 டன் உணவு தூக்கி வீசப்படுகிறது.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்