எதிரணி ஆட்டக்காரரைத் தாக்கிய உள்ளூர் விளையாட்டாளருக்கு விளையாடத் தடை, அபராதம்

சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் தஞ்சோங் பகார் ஆட்டக்காரர் அனிக் ரிஸ்கினுக்கு (Aniq Rizqin) 30 மாதத் தடையும் 2,000 வெள்ளி அபராதமும் விதித்திருக்கிறது.
Tanjong Pagar Unitedஇன் அந்த 19 வயது ஆட்டக்காரர் கடந்த மாதம் 10ஆம் தேதி தஞ்சோங் பகாருக்கும் Albirex Niigata அணிக்கும் இடையே நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் எதிரணி ஆட்டக்காரரைத் தாக்கினார்.
பிறகு அவரைக் காவல்துறை கைது செய்தது.
விளையாட்டாளர்களைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காகத் தஞ்சோங் பகார் குழுவுக்கு 5,000 வெள்ளி அபாரதம் விதிக்கப்பட்டு அது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு கடைசி வரை வேறு எந்த ஆட்டக்காரரும் தவறாக நடக்கவில்லை என்றால் அந்த அபராதம் ரத்துச் செய்யப்படும்.