பொதுத்தேர்தல் 2025 - 2.75 மில்லியனுக்கும் அதிகமான சிங்கப்பூரர்கள் வாக்களிக்கத் தகுதி

சிங்கப்பூரில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் 2.75 மில்லியனுக்கும் அதிகமான சிங்கப்பூரர்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.
அது முந்தைய தேர்தலைவிட 4 விழுக்காடு அதிகம் என்று தேர்தல்துறை சொன்னது.
2020இல் நடைபெற்ற தேர்தலில் சுமார் 2.6 மில்லியன் தகுதிபெற்ற வாக்காளர்கள் இருந்தனர்.
நாளை (25 மார்ச்) முதல் வாக்காளர் பதிவேட்டைப் பொதுமக்கள் பார்வையிடலாம்.
எனினும் வாக்காளர்களின் விவரங்கள் புதிய தொகுதி எல்லைகளுக்கு ஏற்றவாறு பதிவேட்டில் மாற்றம் செய்யப்படவில்லை.
அதைத் தயார் செய்வதற்குக் கூடுதல் நேரம் பிடிக்கும் என்று தேர்தல்துறை சொன்னது.
வாக்காளர் பதிவேட்டை வெளியிடுவது தேர்தலுக்கு முன்னர் இடம்பெறும் முக்கிய நடவடிக்கை என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.